Monday, August 25, 2014

ஏமாற்றும் விளம்பரங்கள்


உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்!

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்

‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
‪#‎VICKS‬ பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.

‪#‎LIFE‬ BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?

‪#‎COKE‬ மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான்.

‪#‎வெளிநாட்டு‬ கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.

‪#‎ஹிந்தி‬ சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.

‪#‎PIZZA‬ பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

# கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
# Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

# நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

Source: Facebook.

Sunday, July 20, 2014

ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?

ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி?
இயற்கையும்
சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத
புதிராகவே இருக்கும். சில
வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும்
அதிர்ச்சியையும் தரக்கூடியவை.
யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற
முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம்
கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன்
ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான்
ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா?
ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன
மொழியை அடிப்படையாகக் கொண்டது.
அவ்வாறு சீன
எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.5
00 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம்
செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும்
முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற தமிழர்கள்
மொழியையும் கற்றுக்கொடுத்திருக்க
வேண்டும் அல்லது ஜப்பானிய
மொழி தமிழிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க
வேண்டும் என்பது ஓனோ அவர்களின் வாதம்.
அரிசியை உலகிற்கு (கிழக்கு நாடுகளுக்கு)
விளைவிக்க கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள்.
இதில் எவ்வித ஐயமும் கிடையாது. ஜப்பானிய
மொழியானது கி.மு.200க்கு முந்திய காலத்தில்
ஆசியாவிலிருந்தோ அல்லது அருகிலுள்ள
பசிபிக்
தீவுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தோதான்
தோன்றியிருக்க வேண்டும்
என்று நம்பப்படுகிறது. (ஆதாரம் - விக்கிபீடியா)
திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம்: முந்திய
காலங்களில் ஜப்பானில் பெண் பார்க்க
மூன்றுநாட்கள் பெண்ணின் வீட்டிற்கு செல்வர்.
மூன்றாவது நாள் பெண்வீட்டார்
அரிசி இனிப்புப்பண்டம் (SWEET CAKE) கொடுத்தால்
திருமணத்திற்கு சம்மதம் என்று பொருள்.
இது தமிழில் பழங்காலம் மட்டுமல்ல இன்றும்கூட
இருக்கிறது. என்ன பெண் பார்க்கும் நாட்கள்
ஒன்றாக சுருங்கிவிட்டது. ஜப்பானிய-தமிழ்
மொழியைப்பற்றி ஆராய்ந்த
ஓனோ அவர்களைப்பற்றி அறிந்தால்
மட்டுமே இதை முழுமையாகப் புரிந்துகொள்ள
முடியும். தமிழ்
ஓசை களஞ்சியத்திலிருந்து அவர்
வரலாறு (18.01.2009) தமிழ் - ஜப்பானிய
மொழி பற்றி ஆராய்ந்த அறிஞர் சுசுமு ஓனோ:
டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த
சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய
மற்றும் தமிழ்
மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடைய
ேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர்.
1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில்
பட்டம் பெற்றவர். 1944ல்
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத்
தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின்
பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப்
பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன்
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல்
விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல்
காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்
பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப்
பணிபுரிந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டில்
எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர்
வெளியிட்டதைச் ஜப்பானிய அறிஞர்கள்
போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர்.
இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில்
வெளிவந்துள்ளதாக அறிஞர்
பொற்கோ குறிப்பிடுவார்.
கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர்
முனைவர் பட்டம் பெற்றவர்(1952).
சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில்
பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி,
அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர்
மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய
அகராதியின் படிகள் ஜப்பானில்
பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர்
வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய
ஜப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர்
ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம். "ஜப்பானிய
மொழியின் தோற்றம்" என்ற
ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர்.
இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த
நூலின் வருகைக்குப்
பிறகு ஜப்பான்மொழி பற்றி அறியும்
வேட்கை ஜப்பானியர்களுக்கு உருவானது.
ஓனோ அவர்கள்
பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர்.
ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன்
இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும்
மேற்பட்ட ஆய்வுக்
கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர்
சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல்
சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல
ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே ஜப்பானிய
மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள்
ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும்
மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள்
மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண
ஆய்வு,தொன்மையான ஜப்பானிய இலக்கிய
ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர். 1957ல் அவர்
ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத்
தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக்
கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன்
மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த
மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும்
அவரால் வெளிக்கொணர முடியவில்லை.
இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின்
மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும்
பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால்
இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத்
தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின்
பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய
பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில்
கொள்ளவேண்டும்.டோக்கியோ காக்சுயின்
பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய
சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல
ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும்
ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30
ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம்
ஆய்வை நூலாக வெளியிட்டார். ஜப்பானிய
மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள்
விற்பனை ஆயின (நாம்
நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின்
ஆணைக்கு ஆண்டுக்கணக்கில்
காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக). தமிழ்
படிக்கத் தமிழகத்திற்கு வந்த
சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப்
பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த
முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத்
தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும்
இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980
ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த
ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச்
சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - ஜப்பானிய
மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத்
தொடங்கின. 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
ஜப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில்
"ஜப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற
தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள
ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில்
இக்கட்டுரை வெளியானது.தமிழ் ஜப்பானிய
மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக
பொற்கோ இதனைக்
குறிப்பிடுகிறார்.கெங்கோ என்ற இதழிலும் 1980
ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள்
தமிழ்-ஜப்பானிய உறவு பற்றி எழுதினார்.இதன்
விளைவாகத் தமிழ்- ஜப்பானிய
மொழி உறவு பற்றி ஜப்பான் நாட்டில்
ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது. ஆசகி என்ற
நாளிதழில் வெளிவந்த
கட்டுரை ஒன்றை ஜப்பானில் உள்ள இந்தியத்தூதரகம்
சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள்
துணைவேந்தர் முனைவர்
தாமோதரனுக்கு அனுப்பியது.இதன்பிறகு துண
ைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும்
ஓனோவும் இணைந்து தமிழ்- ஜப்பானிய
மொழியாய்வில்
ஈடுப்பட்டனர்.மடல்வழியாகஆய்வு முயற்சி நீண்டது
.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச
ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல்
சென்னை வந்தார்.இரண்டு நாள் உரையாடலுக்குப்
பிறகு ஜப்பான் திரும்பினார். தமிழ் ஜப்பானிய
மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத்
தொடங்கியதும் ஜப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்
(Nippon Hoso Kyokay) )கள ஆய்வுப்பணிக்கு உதவ
முன்வந்தது.ஆசகி என்ற செய்தித்தாள்
நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980 இல்
ஜப்பானிலிருந்து களப்பணிக்குக்
குழு புறப்பட்டது. ஒருமாத காலம்
இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.கள
ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய
ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப்
பல்கலைக்கழகத்தில்
கலந்துரையாடினர்.பல்கலைக்கழக இசைவுடன்
இந்தக் கலந்துரையாடலைச் ஜப்பான்
என்.எச்.கே நிறுவனம் ஜப்பானிய
தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.
தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட
உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப்
பட்டு 01.11.1980 இல் ஜப்பான் நாட்டில்
ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான
மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன.
தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும்
பலவகையில் தொடர்புகள் தங்கள்
மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே ஜப்பானியர்க
ளின் மகிழ்ச்சிக்ககுக் காரணம்.
இத்தகு பெருமைக்குரிய
ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ்
மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத்
தமிழக அரசு முடிவுசெய்தது.மாநாட்டின்
பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ்
ஜப்பானியமொழிக்கு இடையிலான
உறவு பற்றி படிக்கப்பட்டது.இந்து.எக்சுபிரசு உள்ள
ிட்ட ஏடுகள்
புகழ்ந்து எழுதின.இவ்வாய்வு முடிவில்
உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள்
இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.
12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ்
ஜப்பானிய மொழியில் திராவிடமொழிகளின்
செல்வாக்கு" பற்றிய
ஒரு கட்டுரையை எழுதினார். ஜப்பானிய
மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில்
இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச்
சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும்
வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும்
ஜப்பானிய மொழிக்கும் உள்ள
உறவுகளை விளக்கும் வகையில்
அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட
வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல்
சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய
ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.
ஓனோ அவர்கள் தமிழ் ஜப்பானிய உறவு பற்றிய தம்
ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப்
பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ,பர்ரோ அவர்களின்
கருத்தறிய விரும்பினார்.
அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்
களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள்
மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.1981
ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப்
பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத்
தொடர்ந்தார்."தமிழ் ஜப்பானிய ஒலி ஒப்புமை"
என்ற ஒரு நூல் எழுதித் தம்
ஆய்வை உலகிற்கு வழங்கினார். சென்னைப்
பல்கலைக்கழகத்தில்
ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின்
நெறிப்படுத்தலில் பல வகையில் தம்
ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டா
ர். மொழி ஒப்பியல்
வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப்
படித்தார்.திராவிடமொழியியலில் வெளிவந்த
நூல்களைக் கற்றார். ஆழமாகத்
தமிழ்மொழியையும் இலக்கண
இலக்கியங்களையும் அறிந்தார். தமிழ்மொழிக்கும்
ஜப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில்
ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப்
பாடுபொருளிலும்
ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..நம் சங்க
இலக்கியங்கள் போலச் ஜப்பானிய மொழியில்
மங்யோசு என்ற தொகை இலக்கியம்
உள்ளது.இரண்டு தொகைகளிலும் பாடுபொருள்
ஒற்றுமை உள்ளது.தமிழ் ஜப்பானிய
உறவுக்கு ஒலி அமைப்பு, சொல்
அமைப்பு,சொற்றொடர்
அமைப்பு ஆகியவற்றையும் தொல்
இலக்கியங்களையும்
சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.ஒலியாலும்
பொருளாலும் ஒப்புமை உடைய
நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(எ.கா) நம்பு- நமு யாறு- யற நீங்கு-
நிகு உறங்கு-உரகு கறங்கு-கரகு அகல்-
அகரு அணை-அண கல்-கர எனச் சொல்
ஒற்றுமை உள்ளன. சுசுமு ஓனோ அவர்கள்
ஜப்பானிய அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்.
இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர்
சண்முகதாசு,பேராசிரியர்
மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும்
சுசுமு ஓனோ அவர்களுடன்
இணைந்து பணிபுரிந்துள்ளனர்.மொழியியல்
ஆய்வில் வல்ல பேராசிரியர்
அ.சண்முகதாசு அவர்களும்
பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த
அவர்மனைவி மனோன்மணி அவர்களும்
ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில்
உதவியவர்கள். தமிழகத்தில் கொண்டாடப்படும்
பொங்கல் திருவிழாவைப் போலச் ஜப்பானில்
அறுவடைத்
திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர்
சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின்
திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத்
தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில்
ஜப்பானில்
ஒரு விழா நடைபெறுகிறது.அதனைச் சிறிய
புத்தாண்டு(Koshogatsu )என்பர்.விழா நாளில்
கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக்
கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும்
ஜப்பானிய கொங்கராவிற்கும்
மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும்
தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார். 1982 இல்
தமிழகத்துப் பொங்கல் விழாவைக்
கண்டு இது ஜப்பானில் கொண்டாடப்படும்
பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக்
கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும்
விழாக்களும் ஜப்பானில் நடைபெறும் விழாவும்
எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக்
கண்டு புலமை இதழில்(1981 டிசம்பர்)
எழுதினார்.பழைனவற்றைக்
கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப்
பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச்
சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல்
ஆகிய நிகழ்வுகள் ஜப்பானில் நடைபெறுகிறதாம்.
மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல்
ஜப்பானில் சில பகுதிகளில்
குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.
தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில்
இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல்
செய்திகளுடன் உள்ள உறவையும்
வெளிப்படுத்தியவர். ஜப்பானின் யாயோய்
கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும்
இலங்கையிலுள்ள (கி.மு. 1300300)
காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர்
ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 களின்
முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின்
ஆய்வுமுடிவுகள்
இரு பண்பாட்டுக்குமிடையில்
இலக்கியம்,பண்பாட்டு நடைமுறைகள்
உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத்
தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின.
இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில்
அவர்கள் 1990 இல் சொன்னது : ஜப்பான் மற்றும்
திராவிட மொழிகளின் ஒற்றுமையைத்
தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட
முடியாது. மற்றும் இது ஆழமான
மரபு வழி ஒற்றுமையை நமக்குப்
புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த
ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க
முயற்சி செய்யும். சென்னையில்
தங்கியிருந்தபொழுது அவர்
எழுதி "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற
கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின்
ஏட்டில் வெளிவந்தது.உலக அளவில் நடைபெற்ற
பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில்
கலந்துகொண்டு தமிழ் ஜப்பானிய உறவுபற்றிய
கட்டுரை படித்தவர்.தமிழகப்புலவர்
குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம்
வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப்
பல்கலைக்கழகத்திற்குச் ஜப்பானிய மொழியைக்
கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர்
பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம்
செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு. 1999 இல்
தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய
நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும்
மொழியியல் அறிஞர்களைச்
ஜப்பானுக்கு அழைத்துத் தமிழ்
ஜப்பானியமொழி உறவு பற்றிப் பேசினார் இதில்
பொற்கோ ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்கள்
அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன்,
வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர்
இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு,
மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும்
,மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன்
மலேசியாவிலிருந்தும் சென்றனர். இந்த ஆய்வரங்க
உரைகள் தொகுக்கப்பட்டுச் ஜப்பானிய மொழியில்
வெளிவந்தன.29 ஆண்டுகள் தமிழ் ஜப்பானிய
ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச்
ஜப்பானிய மக்களும்,ஆய்வறிஞர்களும்
போற்றி மதிக்கின்றனர். தமிழ்க்
கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன்
பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத்
தொடர்புகளைப் பேணிவந்தார். ஜப்பானிய
மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக்
கற்குமாறு அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும்
ஜப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ்
மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில்
நெருங்கியத் தொடர்பு உள்ளதைப்
பல்வேறு சான்றுகள் வழியாக
உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர்
சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில்
14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில்
இயற்கை எய்தினார்.அறிஞரை இழந்து தமிழுலகம்
வருந்துகிறது. டிஸ்கி 1 : இதுபற்றி ஜப்பான்
டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த
ஒரு கட்டுரை டிஸ்கி 2 : சொற்கள், இலக்கணம்,
பொங்கல் திருவிழா, பெண்பார்க்கும் முறை என
எல்லாமே இருமொழிகளிலும் ஒன்றாய்
இருப்பதை வெறும் தற்செயல் என ஒதுக்கிவிட
முடியாது. நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும்.
இதில் நகைச்சுவை என்னவென்றால்
இதுவரை தமிழ்பற்றி ஆராய்ந்து அதன்
பெருமைகளைப் போற்றியவர்கள்
வேற்றுமொழிக்காரர்களே!

Source: http://www.yarl.com/forum3/index.php?showtopic=113320

Thursday, December 26, 2013

குலசேகரப்பட்டினம்

சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன மூன்றாவது மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளிக் கேந்திரம் ஒன்றை அமைக்கத் திட்டம் உள்ளது.

இப்புதிய விண்வெளிக் கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்
.  .
ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளிக் கேந்திரத்தை அமைக்க முதலில் இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் (Latitude) அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

அது ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித் தான் செலுத்தப்படுகின்ற்ன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும் அவ்வித நிலைமையில் ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவது தான் நல்லது.
வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக  ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளிக் கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். இவ்வித நிலையில் விண்வெளிக் கேந்திர அதிகாரிகள் ராக்கெட்  கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை  நடுவானில் அழிப்பர்.

இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர்  25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திசை மாறிய போது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளிக் கேந்திரத்தை கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு   23.93 மணி நேரம் பிடிக்கிறது..  பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில் சுழற்சி வேகம் மணிக்கு  1569 கிலோ மீட்டராகத் தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளிக் கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத் தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்/விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளிக் கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில் தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளிக் கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளிக் கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக  பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன 
  
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625  கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.
 .
படம்: நன்றி- Mahendragiri LPSC Staff Assn Report
ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடிவதில்லை.

அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீதாகச் செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செய்ற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்கின்ற பிரச்சினையே இராது. அந்த செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு  என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடரபு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல ;பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இன்றேல் நாடே ஸ்தம்பித்து விடும்.

 எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்..வி  ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற மேலும் சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இவற்றுக்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்த இயலும். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை.

ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.. குலசேகரப்பட்டினம் 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுடன் ஒப்பிட்டால் இது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ளது.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து விட்டு மறுபடி குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம்

. ஆனால் ஒன்று. இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உய்ரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தித்  தருவது என்பது உலகில் இப்போது பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகும். உள்ளபடி ( இந்தியா உட்பட) உலகின் பல நாடுகளும் தனியார் நிறுவனங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நாடுகின்றன. முன்கூட்டிப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் சொல்லலாம்.

உலகில் இந்தியா உட்பட விரல் விட்டு எண்ணும் அளவிலான நாடுகளும் தனியார் நிறுவனங்களும் தான் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக் காலத்தில் புதிதாக மொத்தம் சுமார் 1150 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படலாம் என்று யூரோகன்சல்ட் என்னும் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏரியான் மூலம் அல்லது பிற நாடுகளின் ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிட்டால் இந்தியாவிலிருந்து செலுத்துவதற்கு ஆகும் செலவு நிச்சயம் குறைவு. ஆகவே வருகிற ஆண்டுகளில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்தும் மார்க்கெட்டில் கணிசமான பகுதியை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

தவிர, பிற நாடுகள் கேட்டுக் கொண்டால் அவற்றுக்கென நவீன செயற்கைக்க்கோள்களைத் தயாரித்து அளிக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது.

குறிப்பு: இக்கட்டுரை தினமணி டிசம்பர் 20 ஆம் தேதி இதழில் வெளியாகியது.

Wednesday, December 25, 2013

செயற்கை இதயம்


உலகில் முதன் முதலாக, 20-12-2013 (வெள்ளி) அன்று பிரான்ஸ் நாட்டை சார்ந்த 75 வயதானவருக்கு செயற்க்கை இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மேலும் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ முடியும்! இந்த செயற்க்கை இதயமானது French Biochemical Firm Carmat நிருவனத்தால் உருவாக்கப்பட்டது! செயற்க்கை இதயம் செயல்பட தேவயான மின் ஆற்றல் வெளியில் இருந்து லித்தியம்-அயன் பேட்டரி மூலமாக செலுத்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Thursday, December 19, 2013

நீர் மேலான்மை: சிந்திக்காத இந்தியா!

நாட்டை வல்லரசாக மாற்றுகிறேன் என்று என்னற்ற வெளிநாட்டு நிறுவன்ங்களை இந்தியாவுக்குள் கொண்டுவர எதையும் விலையாக கொடுக்க இந்திய அரசாங்கமும், அதில் நாங்கள் தான் முதன்மை மாநிலம் என் தம்பட்டம் அடிக்கும் மாநில அரசுகளும் அறியுமா? அதனால் நம் வளங்கள் எவ்வளவு சுரண்டப்படுகின்றன என்று? நம் நாட்டு நீர், மின்சாரம், உழைப்பு என் அனைத்தையும் உறிந்து கொண்டு நமக்கு தருவதொ பிச்சை சம்பளம், அளவில்லாத அசுத்தமும் தான்!

டிசம்பர் 16, 2013 அன்று தீ ஹிந்து நளிதழில் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய " ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் 'மறை நீர்'!" என்ற கட்டூரைய படித்தேன், நெங்சம் பதறியது! எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம் நாம் நம் இயற்க்கை வளங்களை பாதுகாப்பதில்??

 அந்த கட்டூரையை பிரதி எடுத்து பதித்து இருக்கிரேன் அனைவரும் அறிய வேண்டும் என்று!!.

இதோ:
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.